இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சிறுமிகள் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேர் கைது

12/2/2025 2:28:54 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


காரைக்குடி, -காரைக்குடியில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி பகுதியை சேர்ந்த 15, 13 வயது சிறுமிகளை தாயின் சம்மதத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதையடுத்து காரைக்குடி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கடந்த ஆக.30ல் செக்காலை முதல் வீதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த பூமயில் (58), அவரது மகள் சொர்ணலதா (37) ஆகியோரை இந்த வழக்கில் கைது செய்தனர். சிறுமிகள் கொடுத்த தகவலின் படி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கடலை வியாபாரி தங்கராஜ், அவரது மனைவி சித்ரா, அதிமுக சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் முத்து முகமது உள்பட 8 பேர் கடந்த 28ம் ேததி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ரவிக்குமார், அரியக்குடி பில்டிங் கான்ட்ராக்டர் சரவணன், கழனிவாசல் லதா ஆகியோரை டிஎஸ்பி கார்த்திகேயன் நேற்று கைது செய்தார். போலீசார் கூறுகையில், ‘‘இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள லதா மூலமாகவே ஆட்களுக்கு சிறுமிகள் சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.

மேலும் சில
  • போலி நகை அடமானம் வைத்து வங்கியில் 3 லட்சம் ரூபாய் மோசடி - நகை மதிப்பீட்டாளர் கைது



  • கணவனை அடித்து கொன்ற மனைவி போலீசில் சரண்



  • வளவநாதீஸ்வரர் கோயில் ஐம்பொன் சிலை திருட்டு: 7பேர் கைது



  • தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பயங்கரம் - 2 மாணவர்களுக்கு சரமாரி கத்திக்குத்து: 4 பேர் கைது



  • வடபழனியில் கணவர் படுகொலை - கள்ளக்காதலனுடன் நெருக்கம் ஏற்பட்டது எப்படி? ; மனைவி பரபரப்பு வாக்குமூலம்



  • மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் போலீஸ் விசாரணை முடிந்து மதன் மீண்டும் சிறையில் அடைப்பு



  • மரத்தில் கட்டிவைத்து கர்ப்பிணியை தாக்கிய மாமனார், மாமியார் கைது



  • காலாவதி விசாவுடன் சுற்றிய வெளிநாட்டினர் 2 பேர் கைது



  • பிளம்பரை அடித்து கொன்று தண்டவாளத்தில் சடலம் வீச்சு - மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது ; திருநின்றவூரில் பரபரப்பு



  • திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு - ஒருவர் கைது



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]