இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு

12/2/2025 2:28:06 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு

தூத்துக்குடி, -தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குள் நேற்று முதல் ஸ்மார்ட் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடும் சோதனைக்கு பிறகே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த அக்.16ம் தேதி பாய்லர் வெடித்து சிதறியதில் மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் பலியாகினர். இது நடந்த சில தினங்களில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டது. ‘‘வாட்ஸ் அப்’’ மூலம் வெளி உலகிற்கு இது வேகமாக பரவியது.

அனல்மின் நிலைய பணியாளர்கள், தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் மூலம்தான் இந்த தகவல் வெளியே பரவுவதாக அனல்மின் நிலைய நிர்வாகம் கருதியது. இதனைத்தொடர்ந்து நேற்று முதல் அனல்மின் நிலையத்திற்குள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தக் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.தமிழகத்தில் வேறு எந்த அனல்மின் நிலையங்களிலும் இதுபோன்ற கடுமையான உத்தரவுகள் இல்லாத நிலையில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை திரும்பபெற வேண்டும் என்று அவர்கள் கூட்டாக ஒன்றிணைந்து மின்வாரியத்தலைவர், இயக்குநரிடம் ஏற்கனவே கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மின் உற்பத்திக்கழக இயக்குநர் இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனல்மின் நிலைய நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இதை மீறி தெர்மல் அனல்மின் நிலைய நிர்வாகம் நேற்று முதல் இந்த உத்தரவை கட்டாயமாக செயல்படுத்தியது.காலையில் அனல் மின் நிலையத்துக்கு பணிக்கு வந்த அதிகாரிகள், தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாவலர்கள் சோதனையிட்டு அவர்கள் வைத்திருந்த ஸ்மார்ட் போன்களை வாங்கி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். பணி முடிந்து செல்லும் போது செல்போன்களை திரும்ப பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் சில
  • 3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்



  • பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’



  • சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்



  • புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு



  • மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்



  • முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்



  • திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு



  • வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்



  • திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்



  • காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]