இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வங்கி கணக்குகளை பயன்படுத்தி கருப்பு பணத்தை மாற்றுவதற்கு உதவினால் கடும் நடவடிக்கை - மத்திய நிதி அமைச்சர் எச்சரிக்கை

11/19/2016 12:52:13 PM
பூந்தமல்லி அருகே பரபரப்பு - டிவி ஷோ ரூமில் பயங்கர தீ ; 45 நிமிடம் போராடி அணைப்பு பிரபல கிரிக்கெட் வீரரின் திருமண அழைப்பிதழில் பிரதமர் பெயரில் பிழை


புதுடெல்லி, - மற்றவர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள் மீதும், அதற்கு உதவியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.கடந்த 8ம் தேதி முதல் வெளியான அறிவிப்பை தொடர்ந்து செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். டிசம்பர் 30 வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு காலக்கெடு அறிவித்துள்ளது.  இதற்கிடையில் மத்திய அரசால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான மானியங்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்குகளை குறிவைத்து கருப்பு பணம் பதுக்குவோர், ஹவாலா தரகர்கள் ஆகியோர் பணத்தை மாற்றுகின்றனர். சாதாரண ஏழை எளிய மக்களுக்கு கமிஷன் கொடுத்து அவர்களின் வங்கி கணக்குகளில் தங்கள் பணத்தை போட்டு மாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தடுப்பதற்காக கரன்சி மாற்ற வருபவர்களுக்கு விரலில் மை தடவப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் தற்போது மை வைக்கப்பட்ட பின்னர் வங்கிகளில் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் மற்றவர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் முன்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘சிறுவணிகர்கள், கூலி தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகியோரின் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அது பற்றி வருமான வரித் துறை கேட்காது’ என்று கூறப்பட்டது.  

 ஆனால் தற்போது நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ‘‘மற்றவர்களின் கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்களது வங்கி கணக்கை பிறரின் செயல்பாடுகளுக்காக அனுமதிப்பவர் மீது வருமானவரித் துறை சட்டத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மற்றவர்களின் கருப்பு பணத்தை தங்களது வங்கி கணக்கை பயன்படுத்தி வெள்ளையாக மாற்றுவதற்கு பொது மக்கள் அனுமதிக்கக் கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது. ‘அரசிடம் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணத்தை பதுக்க நினைக்கும் யாரும் தப்ப முடியாது. அவர்களுக்கு எந்த வகையி–்லும் மத்திய அரசு உதவி செய்யாது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியில் கருப்பு பணத்தை முற்றிலும் அழிக்காமல் விடப் போவதில்லை. இது போன்று அடுத்தவர் கணக்கை பயன்படுத்தி கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள் குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் அளிக்கலாம்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கரன்சி அறிவிப்புக்கு எதிரான போராட்டம் - மம்தா, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் வழக்கு



  • மகாராஷ்டிராவில் தொழில் அதிபரிடம் ரூ1.12 கோடி பறிமுதல்



  • பிரபல கிரிக்கெட் வீரரின் திருமண அழைப்பிதழில் பிரதமர் பெயரில் பிழை



  • வீடுகளில் தங்கம் சேமிக்க கட்டுப்பாடு விதிக்கப்படாது - மத்திய அரசு மறுப்பு



  • ரூ2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் 50 சதவீத வரி விதிக்க விரைவில் சட்டதிருத்தம் - மத்திய அரசு பரிசீலனை



  • நியூஸ் ரூம்



  • சென்னை மற்றும் புறநகரில் சாலைகளில் நடமாடும் கால்நடைகளால் அவதி - மக்கள் அச்சம்; அதிகாரிகள் அலட்சியம்



  • தாகூரின் நோபல் பதக்கம் திருட்டு பிரபல பாடகர் பிடிபட்டார் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு



  • வங்கிகளுக்கு கரன்சி விநியோகம் முறையாக நடைபெறுகிறதா? - கெஜ்ரிவால் சந்தேகம்



  • ஜன்தன் கணக்கில் ரூ64,252 கோடி: 3000 பேருக்கு வருமான வரி நோட்டீஸ்



Facebook

Twitter

இன்னொரு பக்கத்தை காட்டுகிறார் டாப்ஸி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]