இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - 133 ரன்னில் பாகிஸ்தான் ஆல் அவுட்

11/18/2016 4:31:51 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


கிறைஸ்ட்சர்ச்: பாகிஸ்தான்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான, முதல் டெஸ்ட் கிரிக்கெட் கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2வது நாள் ஆட்டம் இன்று நடந்தது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை பேட்டிங் செய்யுமாறு கேட்டு கொண்டது.
இதன்பின் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் மிஸ்பா உல் ஹக் 31 ரன் எடுத்தார்.
அசார் அலி 15, சமி அஸ்லாம் 19, பாபர் அசாம் 7, யூனுஸ்கான் 2, ஆசாத் சபீக் 16, சர்ப்பராஸ் அகமது 7, முகமது ஆமிர் 3, சோகைல் கான் 9, ரகத் அலி 0 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். யாசிர் ஷா 4 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் மித வேக பந்து வீச்சாளரான கோலின் டி கிராண்ட்ஹோமி 6, வேகப்பந்து வீச்சாளர்கள் சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3 ஓவர்கள் முடிவில் 2 ரன் எடுத்திருந்தது. லதாம், ரவால் தலா 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

அறிமுக போட்டியில் அசத்திய கிராண்ட்ஹோமி
15.5 ஓவர்கள் பந்து வீசி 41 ரன்களை மட்டும் விட்டுகொடுத்து 6 விக்கெட் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் கோலின் டி கிராண்ட்ஹோமிக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் அறிமுக போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக 1951ம் ஆண்டில் அலெக்ஸ் மோயர் 155 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே, அறிமுக போட்டியில், நியூசிலாந்து வீரர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. இதனுடன் அறிமுக போட்டியில், 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 8வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதனுடன் நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தானின் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக 2000-01ல், ஹாமில்டனில் நடந்த போட்டியில், 104 மற்றும் 118 ரன்னுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்டாகியிருந்தது.

மேலும் சில
  • டூ பிளசிஸ் மீதான புகார் இன்று விசாரணை



  • ஒலிம்பிக் தங்க பதக்கத்தை இழந்த ரஷ்ய வீராங்கனை



  • சீன ஓபன் சூப்பர் சீரிஸை தொடர்ந்து ஹாங்காங் ஓபனை குறிவைக்கும் பி.வி.சிந்து



  • 2 இன்னிங்சிலும் முதல் பந்திலேயே ‘டக்’ ஆண்டர்சனை கலாய்த்த சேவாக், கில்கிறிஸ்ட்



  • இங்கிலாந்து வீரர்களுக்கு நாள் ஒன்றுக்கு படியாக ₹4,200 வழங்க பிசிசிஐ முடிவு



  • ரோஸ் டெய்லருக்கு பார்வை பிரச்னை - பரிசோதிக்க முடிவு



  • சீன ஓபன் சூப்பர் சீரியஸ் பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவின் தாய் பெருமிதம்



  • மொகாலி டெஸ்ட் ஸ்டூவர்ட் பிராடு சந்தேகம்



  • ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ஆன்டி முர்ரே சாம்பியன்



  • பாக். அணி ஆலோசகராக சோயிப் அக்தர் நியமனம்?



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]