காசோலைகளை ஏற்று கொள்ளும்படி சாய் நிர்வாக இயக்குனருக்கு விஜய் கோயல் உத்தரவு
11/18/2016 4:31:16 PM
புதுடெல்லி: இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), ‘கம் அண்டு ப்ளே’ திட்டத்தின் கீழ், தற்போது தங்களது கட்டணத்தை பணமாக மட்டுமே பெற்று வருகிறது. இந்நிலையில் சாய் அமைப்பின் வசதிகளை மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் பயன்படுத்தி கொள்ள விரும்பும் பொது மக்களிடம் இருந்து, காசோலை அல்லது டிடி-களை ஏற்று கொள்ளும்படி, அதன் நிர்வாக இயக்குனருக்கு, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் உத்தரவிட்டுள்ளார். ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.