லிட்டில் மாஸ்டர் விராட்கோஹ்லி - கவாஸ்கர் பாராட்டு
11/18/2016 4:30:47 PM
ராஜ்கோட்: இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் கோஹ்லி என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விராட்கோஹ்லி ஒரு வெற்றிகரமான நபர். கேப்டன் பொறுப்பை ஏற்றபின் அவர் அடிக்கும் 7வது சதமாகும். டான் பிராட்மேன், ஜார்ஜ் ஹெட்லிக்கு அடுத்து ெடஸ்ட்டுகளில் சாதிக்கும் 3வது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். இதுவரை அவர் ஆடிய 50 டெஸ்ட்டில், 13 அரை சதமும், 14 செஞ்சுரிகளும் அடங்கும். 50 ரன்களுக்கு மேல் தாண்டிவிட்டால் செஞ்சுரியை இலக்காக வைத்து ரன் குவிப்பதை முந்தைய போட்டிகளில் பார்க்க முடிந்துள்ளது. இங்கிலாந்து தொடர் முடிவதற்குள் ேமலும் செஞ்சுரிகளை அடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. லிட்டில் மாஸ்டர் என்ற பட்டத்தை பெறுவதற்குரிய நபராக கோஹ்லி உள்ளார். அவருடைய போராடும் குணம், வெற்றிக்காக உழைப்பது போன்றவை பிரமிக்க வைக்கிறது. இந்திய ெடஸ்ட் அணியில், 50 டெஸ்டில் சாதித்தவர்கள் பட்டியலில் கவாஸ்கர், டிராவிட், சேவாக், டெண்டுல்கர் வரிசையில் கோஹ்லியும் இடம் பிடித்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.