இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிராவில் பாஜ அமைச்சரின் காரில் ரூ92 லட்சம் பறிமுதல்

11/18/2016 3:31:16 PM
8 நாட்களில் சவரனுக்கு ரூ1,896 குறைந்தது - தங்க நகை வர்த்தகம் ரூ1500 கோடி பாதிப்பு ; நகை தொழிற்சாலைகள் மூடல் வங்கிகளில் பணம் மாற்றும் பணி நிறுத்தம் ரூ500, ரூ1000 நோட்டுகளுடன் வந்த மக்கள் தவிப்பு


மும்பை, -மகாராஷ்டிரா மாநில அமைச்சருக்கு சொந்தமான காரில் இருந்து 92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள உஸ்மனாபாத்மாவட்டத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாகன சோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், உமர்கா தேக்சில் என்ற இடத்தில் பறக்கும் படையினர் அவ்வழியாக வந்த காரை ஆய்வு செய்தனர். அதில் ரூ.91.5 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த கார், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கின் நிறுவனத்துக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் நர்னவாரே தெரிவித்துள்ளார்.

‘‘சர்க்கரை ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் கொண்டு செல்லப்பட்டது. முறைகேடு எதுவும் இல்லை’’ என அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘அமைச்சர் சுபாஷுக்கு சொந்தமான நிறுவனத்தின் மீதுஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போது கருப்பு பணத்தை மாற்ற முயன்றுள்ளார். எனவே, சுபாஷை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.
 மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘‘ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற விஷயம் மூத்த பாஜ தலைவர்கள், முன்னனி நிறுவனங்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற பாஜ தலைவர்களின் பணபரிவர்த்தனையை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.




மேலும் சில
  • வங்கி கணக்குகளை பயன்படுத்தி கருப்பு பணத்தை மாற்றுவதற்கு உதவினால் கடும் நடவடிக்கை - மத்திய நிதி அமைச்சர் எச்சரிக்கை



  • ரூபாய் நோட்டு விவகாரம் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் ரொக்கமாக தர கோரிக்கை



  • அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் பாகிஸ்தான் - அமெரிக்கா புதிய தகவல்



  • கரன்சி நோட்டு விவகாரத்தால் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் சொல்கிறார் ராம்தேவ்



  • 50, 100 ரூபாய் நோட்டுகளை வங்கியில் குவித்த வணிகர்



  • வங்கிகளின் வராக்கடன் விவகாரம் - ரூ500 கோடி கடன்காரர்கள் பட்டியலை வெளியிடுங்கள் ; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு



  • குடும்ப வன்முறை தடுப்பு வழக்கில் ஷீலா தீட்சித் மருமகனுக்கு சிறை - ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு



  • ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு சிந்திக்கவில்லை - கொல்கத்தா ஐகோர்ட் குட்டு



  • 4 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் இணையதள சேவை தொடக்கம்



  • வங்கி நேரம் முடிந்த பின்பு - இரவில் பணம் மாற்றிய உத்தரபிரதேச அமைச்சர்



Facebook

Twitter

விக்ரமை இயக்கும் சிம்பு இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]