இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கரன்சி வாபஸ் அறிவிப்பு எதிரொலி - சீனாவில் இந்திய பணம் டொபாசிட் செய்ய தடை ; வெளிநாடுவாழ் இந்தியர்கள் குழப்பம்

11/18/2016 3:28:33 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


பீஜிங், -இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக சீனாவில் இந்திய ரூபாயை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சி நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தடாலடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் அந்த பணத்தை மாற்றுவதற்காக கடந்த 1 வார காலத்திற்கும் மேலாக பல்வேறு வேதனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் சீனாவில் உள்ள இந்தியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு இந்திய பணத்தை டெபாசிட் செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
 சீனாவில் உள்ள பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஏழு இந்திய வங்கிகளும் இங்கு செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் தங்களிடம் உள்ள அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ள இந்திய பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு வந்தனர். ஆனால், சீன அரசு உத்தரவின்படி இந்திய பணத்தை பெற்றுக் கொள்ளமுடியாது என வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.  ஆனால் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர் வங்கி கணக்கில் முறையான ஆவணங்களை காட்டி செலுத்தலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியா, அரபு எமிரேட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களிடம் உள்ள இந்திய பணத்தை எவ்வாறு மாற்றிக் கொள்வது என தெரியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். கரன்சிகள் செல்லாது என்ற அறிவித்த போது, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என மத்திய அரசு முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • வங்கிகளில் 9 நாளில் ரூ5.44 லட்சம் கோடி டெபாசிட்



  • இரோம் ஷர்மிளா பிரசாரம் துவங்கினார்



  • புலிகள் மரணம் 25% அதிகரிப்பு - மத்திய அமைச்சர் தகவல்



  • காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் - மேலும் 10 ஆயிரம் ஏடிஎம் இன்று முதல் இயங்கும்



  • வங்கியில் அதிக பணம் எடுக்க வர்த்தகர்களுக்கு விரைவில் அனுமதி - நிர்மலா சீதாராமன் உறுதி



  • புதிய 2000 ரூபாயிலும் வந்தது கள்ள நோட்டு? - ஒடிசாவில் ரூ4 லட்சம் சிக்கியது



  • கெஜ்ரிவால் தப்பான தகவல் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!



  • புதிய ரூ2000 நோட்டில் வங்க புலி ஏன் இல்லை? - மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்



  • செல்பி உயிரிழப்பு இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]