இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் நாளை வாக்குபதிவு - 22ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

11/18/2016 3:26:44 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல்  கடந்த மே மாதம் நடந்தது. அப்போது தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரைத்தொடரந்து 2 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் மரணமடைந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  புதுவையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானதால், அவர் எம்.எல்.ஏ. ஆகும் வகையில்  நெல்லித்தோப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியையும் சேர்த்து 4 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது.

தஞ்சையில் டாக்டர் அஞ்சுகம் பூபதி(திமுக), ரங்கசாமி(அதிமுக),  குஞ்சிதபாதம்(பாமக), ராமலிங்கம்(பா.ஜ.), அப்துல்லா சேட்(தேமுதிக) உள்ளிட்ட 14 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் கே.சி. பழனிசாமி(திமுக), செந்தில் பாலாஜி(அதிமுக), பாஸ்கரன்(பாமக),  பிரபு(பாஜ), முத்து (தேமுதிக) உள்பட 39 பேர்,  திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன்(திமுக), ஏ.கே. போஸ்(அதிமுக),  சீனிவாசன்(பாஜ), தனபாண்டியன்(தேமுதிக) உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.  ெநல்லித்தோப்பு தொகுதியில் புதுவை முதல்வர் நாராயணசாமி(காங்), ஓம்சக்தி சேகர்(அதிமுக) உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2 வாரமாக இத்தொகுதிகளில் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது.  

நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடக்கிறது.
வரும் 22ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். தஞ்சை தொகுதி ஓட்டுகள்  குந்தவை நாச்சியார்  அரசு கல்லூரியிலும்,  அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுகள் கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.  

மேலும் சில
  • வங்கிகளில் 9 நாளில் ரூ5.44 லட்சம் கோடி டெபாசிட்



  • இரோம் ஷர்மிளா பிரசாரம் துவங்கினார்



  • புலிகள் மரணம் 25% அதிகரிப்பு - மத்திய அமைச்சர் தகவல்



  • காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் - மேலும் 10 ஆயிரம் ஏடிஎம் இன்று முதல் இயங்கும்



  • வங்கியில் அதிக பணம் எடுக்க வர்த்தகர்களுக்கு விரைவில் அனுமதி - நிர்மலா சீதாராமன் உறுதி



  • புதிய 2000 ரூபாயிலும் வந்தது கள்ள நோட்டு? - ஒடிசாவில் ரூ4 லட்சம் சிக்கியது



  • கெஜ்ரிவால் தப்பான தகவல் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!



  • புதிய ரூ2000 நோட்டில் வங்க புலி ஏன் இல்லை? - மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்



  • செல்பி உயிரிழப்பு இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]