கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு - டாஸ்மாக் பாரில் பயங்கர அடிதடி ; 4 பேர் கைது
11/18/2016 2:42:19 PM
கூடுவாஞ்சேரி, -சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்குள்ள பாருக்கு நேற்றிரவு 2 கோஷ்டியை சேர்ந்தவர்கள் மது குடிக்க வந்துள்ளனர். மதுவை ஊற்றி கொடுப்பது தொடர்பாக கடை ஊழியர்களுக்கும் மது குடிக்க வந்த கும்பலுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.அப்போது ஒரு கும்பல், செல்போனில் தகவல் கொடுத்து 20க்கும் மேற்பட்டவர்களை அங்கு வரவழைத்தனர். அவர்கள் வந்து டாஸ்மாக் பாரில் குடித்து கொண்டிருந்தவர்களையும் கடை ஊழியர்களையும் சரமாரியாகத் தாக்கினர். பார் ஊழியர்கள் சரவணன் (24), விக்கி (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார், எஸ்ஐ நெடுமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அடிதடியில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியது. அவர்களை போலீசார் விரட்டி சென்று 4 பேரை பிடித்தனர். விசாரணையில், வல்லாஞ்சேரி, அண்ணாசாலை பகுதியை சேர்ந்த சுதாகர் (24), நந்திவரம்-கூடுவாஞ்சேரி செங்கேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் (22), புருஷோத்தமன் (25), பஜனை கோயில் தெருவை சேர்ந்த விவேக் (21) என தெரிந்தது.