ஆவடி ராணுவ குடியிருப்பில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு
11/17/2016 3:07:12 PM
புழல், -ஆவடி, எச்விஎப் குடியிருப்பை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சுதா (36). இக்குடியிருப்பு வளாகத்தில் நேற்றிரவு சுதா நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது ஒரு பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி, சுதாவிடம் ஒரு காகிதத்தைக் காட்டி முகவரி கேட்டார். அப்போது சுதாவின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்தான்.
இதில் சுதா நிலைகுலைந்து கீழே விழுந்து அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், மர்ம ஆசாமி பைக்கில் ஏறி தப்பி சென்றான்.இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் சுதா புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.