விக்னேஷ் சிவன் இயக்கும் படம் சிவா அவுட் சேதுபதி இன்
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் படம் இயக்க இருந்தார். இது தொடர்பாக விக்னேஷ் சிவனும் சிவகார்த்திகேயனும் சந்தித்து பேசினர். இந்நிலையில் திடீரென சிவகார்த்திகேயனை விட்டுவிட்டு விஜய் சேதுபதியுடன் படம் செய்கிறார் விக்னேஷ் சிவன்.இந்த படத்துக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவும் முழுநீள காமெடி காதல் கதையாக உருவாகிறதாம்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனைதான் நடிக்க வைக்க விக்னேஷ் விரும்பினாராம். ராஜா இயக்கும் படம், ரொமோ, பொன்ராம் டைரக்ஷனில் ஒரு படம் என 3 படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்துடன் மற்றொரு படமும் ஒரே நேரத்தில் நடிக்க அவர் விரும்பவில்லையாம். அதே சமயம், ஒரே நேரத்தில் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்க விஜய் சேதுபதி தயாராக இருக்கிறார். அதனால் விக்னேஷ் கால்ஷீட் கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம். இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதற்காக 2 இளம் முன்னணி ஹீரோயின்களிடம் பட டீம் பேசி வருகிறதாம். ஏப்ரல் 14ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளது.