தனுஷ் ரசிகர்கள் கோபம்? வெற்றிமாறன் பயம்
பொல்லாதவன், ஆடுகளம் என 2 வெற்றிப் படங்களை தனுஷுக்கு தந்தவர் இயக்குனர் வெற்றி மாறன். அடுத்து, ‘வட சென்னை’ படத்தில் இணைகின்றனர். வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படம் விருதுகளை பெற்றது. தனுஷ் தயாரித்திருந்தாலும் ஹீரோவாக தினேஷ் நடித்திருந்தார். தனுஷை ஹீரோவாக்காதது ஏன் என்றதற்கு வெற்றிமாறன் விளக்கம் அளித்தார். அவர் கூறியது: பிரபலமான ஒரு ஹீரோ போலீஸிடம் சிக்கி மூன்றாம் தர சித்ரவதை அனுபவிக்கும் காட்சியை அவரது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.
தனுஷை இப்படத்தில் ஹீரோவாக தேர்வு செய்யாததற்கு இதுதான் காரணம். அவர் இப்படத்தின் தயாரிப்பில் இணையாமலிருந்திருந்தால் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்றிருக்குமா என்பது சந்தேகம்.தனுஷ் ராசியான நடிகர். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. அதனால்தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு அவர் பொருந்தமாட்டார் என்று எண்ணினேன். ஒருவேளை நடித்திருந்தால் அவரது ரசிகர்கள் என் மீது கோபம் அடைந்திருப்பார்கள். ‘ஆடுகளம்’ படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தை அப்போது ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் இப்போது அப்படம் ரிலீஸானால் அவர் பாத்திரத்தை ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.