நஸ்ரியா மீண்டும் நடிக்க தடை இல்லை கணவர் உறுதி
குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனத்தில் இடம் பிடித்த நஸ்ரியா நாசிம், நேரம், ராஜா ராணி, வாய் மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஷ், நய்யாண்டி என 5 படங்கள் மட்டுமே நடித்திருந்தார். அதிலேயே முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். திடீரென்று மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்து நடிப்பிலிருந்து விலகினார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். ஆனால் நஸ்ரியா மீண்டும் நடிக்க விரும்பினால் தடை சொல்ல மாட்டேன் என்று திருமணத்தின்போதே குறிப்பிட்ட பஹத் தற்போது மீண்டும் அதை உறுதி செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்ேபாது,’நஸ்ரியாதான் எங்கள் குடும்பத்தினருக்கு பாஸ். அதை சந்தோஷமாக நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று அவருக்கு நான் தடை சொன்னதில்லை. அவரே இல்லற வாழ்க்கைக்காக தனிப்பட்ட முறையில் நடிப்பிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டார். எந்த நேரத்திலும் நஸ்ரியா மீண்டும் நடிக்க வரலாம். பொருத்தமான ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருக்கிறார். எப்போது ரீஎன்ட்ரி ஆகிறார் என்பதை அவரே அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை’ என்றார்.