திருவள்ளூர்: திருவள்ளூர் பூங்கா நகர் சிவ- விஷ்ணு ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜலநாராயணர், ஸ்ரீஜலநாராயணி தாயார் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கொடியேற்றமும், தொடர்ந்து யாக பூஜையும் நடந்தது. பங்குனி உத்திரமான இன்று காலை 6 மணிக்கு ஜலநாராயணர் மற்றும் ஜலநாராயணி தாயாருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு ஸ்ரீபூங்குழலி அம்பிகை - ஸ்ரீபுஷ்பவனேஸ்வரருக்கும், ஸ்ரீபத்மாவதி தாயார் - ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்.பசுபதி தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, ஜெயா நகர் ஸ்ரீமகா வல்லப கணபதி கோயிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கும், நாக தேவதைகள் மற்றும் ஸ்ரீதட்சணாமூர்த்திக்கும் தங்க கவசம் சாற்றுதல் விழா நடந்தது. முன்னதாக, இன்று அதிகாலை சிறப்பு ஹோமம் நடந்தது.
can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning