டிராக்டர் கடனுக்காக விவசாயி தாக்கப்பட்டதை கண்டதும் கோலிவுட் நடிகர்கள் விஷால், கருணாகரன் இருவரும் அந்த விவசாயி பெற்றிருந்த கடனை அடைக்க முன்வந்தனர். டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு ஆந்திராவில் தான் பிறந்த புர்ரிபாலம் கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார். அங்கு வாழும் மக்களுக்கு தேவையான வசதிகளை சொந்த செலவில் செய்துகொடுத்துள்ளார். அவரது நற்பணிக்கு மனைவி நம்ரதா சிரோத்கர் தூண்டுகோலாக இருப்பதுடன் துணையாகவும் இருக்கிறார். சமீபத்தில் புர்ரிபாலத்துக்கு நேரில் சென்ற நம்ரதா, நற்பணிகள் நல்லமுறையில் செயல்படுகிறதா என்று மேற்பார்வையிட்டதுடன், ‘அடுத்த முறை வரும்போது மகேஷ்பாபுவை அழைத்து வருகிறேன்’ என கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு புறப்பட்டார்.