Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
21
Mar
மயிலாப்பூர் பெயர் எப்படி வந்தது?


மயிலாப்பூர் என்றால் இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரமாண்ட  புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. மயில் வடிவில் அன்னைமயிலாப்பூர் பற்றி  கூறப்படும் புராண கதைகள் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஒருமுறை கயிலை மலையில் அம்பாளுக்கு பிரணவம்,  பஞ்சாட்சரம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அழகிய மயில் ஒன்று தோகை விரித்து நடனம்  ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு அம்பாளின் கவனம் சிதறியது.

அம்பாள் மயிலாக பிறந்த கதை இதனால் கோபம் கொண்ட சிவ பெருமான், ‘பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாய்’ என்று  அம்பாளை சபித்துவிட்டார்.புன்னை மரத்தடியில் தவம் செய்து தனது தவறை உணர்ந்த அம்பிகை, சுவாமியிடம் சாப  விமோசனம் வேண்டினாள். அவளிடம், தொண்டைநாட்டுக்குச் சென்று தவமியற்றும்படி பணித்தார் சிவபெருமான். அதன்படி,  தொண்டை நாட்டில் அமைந்த இத்தலத்துக்கு மயிலுருவில் வந்த அம்பிகை, இங்கே புன்னை மரத்தின் கீழ் இருந்த  சிவலிங்கத்தை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தாள்.

வழிபாட்டு தலம் உருவான கதை அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து சாப விமோசனம்  தந்தார். அவரிடம் ‘இந்தத் தலத்திலேயே தாங்கள் கோயில் கொண்டு உலகத்தவர்க்கு அருள் பாலிக்கவேண்டும்’ என வேண்டிக்  கொண்டாள் அம்பிகை. அதன்படியே சிவனார் இங்கே கோயில் கொள்ள, அவருடன் அம்பாளும் கற்பகவல்லி எனும்  திருப்பெயருடன் அருள்கிறாள். அவள் மயிலாக வந்து வழிபட்ட தலம் ஆதலால், இவ்வூரும் மயிலை என்று பெயர் பெற்றது.

சிவபெருமானுக்கும் பங்குனி உத்திரத்திற்கும் உள்ள தொடர்பு  பங்குனி உத்திரத்திற்கும் சிவபெருமானுக்கும் தொடர்பு உள்ளது.  சிவபெருமானை சோமசுந்தரர் என்றும் பார்வதி தேவியை மீனாட்சி என்றும் குறிப்பிடுவதுண்டு. சோமசுந்தரர், மீனாட்சியை  திருமணம் செய்து கொண்ட நாளும் பங்குனி உத்திர நாளாகும். இந்த திருமணத்துக்கு பின்னணியில் ஒரு கதை உள்ளது.  சிவபெருமான் தவத்தில் இருந்த போது அவரது தவத்தை கலைக்க மன்மதன் முயன்றான். அதனால் தவம் கலைந்த சிவன்  கோபமுற்று நெற்றிக்கண்ணை திறந்து பார்த்தார். அந்த பார்வை பட்ட மன்மதன் எரிந்து சாம்பலானான். மன்மதனை எரித்ததால்  கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாக இருக்கவே சிவன் மணக்கோலம் பூண்டு பார்வதி தேவியை இந்த தினத்தில் மணந்தார்  என்பது ஐதீகம். அதனாலேயே சிவன் கோயில்களில் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது.
   

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement