விஜய் சேதுபதி பாணிக்கு மாறும் ஐஸ்வர்யா
வசுந்தரா, ஐஸ்வர்யா, ரம்யா நம்பீஸன், காயத்ரி என இளம் ஹீரோயின்களுடன் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் முன்னணி ஹீரோயின் நயன்தாராவுடன் இணைந்தார். அதன்பிறகு அவருக்கு ஜோடி தேடும் இயக்குனர்கள் முன்னணி ஹீரோயினை தேர்வு செய்கின்றனர். அடுத்து ‘தர்மதுரை’ படத்தில் தமன்னாவுடன் நடிக்கும் விஜய் சேதுபதி, ‘இறவி’யில் அஞ்சலி, ‘ஆண்டவன் கட்டளை’யில் ரித்திகா சிங் என ஜோடி போடுகிறார்.‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது அவரும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார். ‘இளம் ஹீரோக்களுடன் நடித்து வந்தாலும் டாப் ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை உள்ளது. சேலை, தாவணி அணிந்து கிராமத்து பின்னணியிலும், குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தேன். இனி கிளாமருக்கு மாறவும் தயார்’ என்றார்.