கீர்த்தி சுரேஷ் பிடிவாதம் 4 படம் கைநழுவியது
‘இது என்ன மாயம்’ மூலம் அறிமுகமான கீர்த்தி, ரஜினி முருகனில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். படம் ஹிட்டான வேகத்தில் தனுஷ், விஷாலுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. வந்த வேகத்திலேயே 2 வாய்ப்புகளும் கைநழுவியது. அதேபோல் தெலுங்கில் கடந்த ஆண்டு ‘நேனு சைலஜா’ படத்தில் நடித்தார். அடுத்து ராம் சரண் நடிக்கும் ‘தனிஒருவன்’ தெலுங்கு ரீமேக்கிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அவைகளும் வேறு ஹீரோயின்களுக்கு கைமாறியது.கீர்த்தியின் வாய்ப்பை தட்டிபறித்தது யாருமல்ல அவரது பிடிவாதம்தானாம். ஓவர் கிளாமராக நடிக்க மாட்டேன் என்ற பாலிசியுடன் நடிக்க வந்தவர் கீர்த்தி. அதுவே புதிய பட வாய்ப்புகள் கைநழுவ காரணமாகிவிட்டதாம். ஆனாலும் விஜய்யின் 60 வது படம் மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படங்களில் கீர்த்தி நடிக்க உறுதியாகி இருப்பது ஆறுதல் தந்திருக்கிறதாம்.கோலிவுட்டில் கிளாமர் காட்டாமல் சமாளித்தாலும் டோலிவுட்டில் கிளாமராக நடிக்காமல் ஜெயிக்க முடியாது என்று கீர்த்திக்கு சில அனுபவஸ்தர்கள் அட்வைஸ் கூறி உள்ளனர். அதை மனதில் வைத்து விரைவில் கவர்ச்சி வாய்ப்புகளை ஏற்கும் வகையில் தன்னை மனதளவில் தயார்படுத்தி வருகிறார்.