ஹீரோ அல்லது ஹீரோயின்கள் டூர் மூடு
ஹீரோ அல்லது ஹீரோயின்கள் டூர் மூடுடன் வெளிநாடு சென்றதும் ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் நாகார்ஜுனா மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் குடும்பத்தினருடன் மாலத்தீவு டூர் சென்றார். அங்கு ஜாலியாக சுற்றித் திரிந்ததோடு மட்டுமல்லாமல் மகன்களுடன் ஸ்கூபா டைவிங் செய்தார். நாகார்ஜுனா தற்போது டபுள் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாராம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘தோழா’ படம் மூலம் நடிப்பதே மகிழ்ச்சிக்கு காரணம் என்கிறார்.