குளச்சல்: காருக்குள் இளம்பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.மண்டைக்காடு காவல்நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதும், டிரைவிங் பழகுவதும் வழக்கம். நேற்று இரவு 9.30 மணியளவில் மைதானத்தில் கார் வந்து நின்றது. நீண்ட நேரமாக கார் அங்கேயே நின்றதால் சந்தேகம் அடைந்த மக்கள், கார் அருகே சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் ஆணும் பெண்ணும் இருந்தனர். அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததாக தெரிகிறது.இதனால் மண்டைக்காடு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
காரில் இளம்பெண்ணுடன் இருந்தவர் தக்கலை அருகே உள்ள ஒரு ஊர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் என்று தெரியவந்தது. பாதிரியாருடன் இருந்த இளம்பெண் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இளம் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். குளச்சல் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் அவர் ஏற்கனவே பாதிரியராக இருந்துள்ளார். அப்போதே அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது. பாதிரியார் தக்கலை அருகே உள்ள ஆலயத்துக்கு சென்ற பின்னரும் அவர்களுடனான பழக்கம் நீடித்து இருக்கிறது.இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மண்டைக்காடு போலீசார், உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களது உத்தரவின்பேரில் பாதிரியாரையும் இளம் பெண்ணையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.இரவு நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று பாதிரியாரிடம் போலீசார் கேட்டபோது, ‘’ இந்த பெண் எனக்கு தெரிந்தவர். அவருக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுக்க அழைத்து வந்தேன்’ என்றார்.