தமிழுக்கு வரும் மல்லுவுட் நடிகை
கோலிவுட்டுக்கு வந்த மல்லுவுட் ஹீரோயின்கள் வரிசையில் ‘தகவல்’ படம் மூலம் ஹீரோயினாக என்ட்ரி ஆகிறார் நடிகை டிம்பிள் ரோஸ். மல்லுவுட் இயக்குனர் பரதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுசீந்திரா இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியது:ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் தகவல்களின் அடிப்படையில்தான் பயணிக்கிறது. சந்தோஷம், துக்கம் தவிர வாழ்க்கையே சில சமயம் எதிர்மறையாக மாறிவிடுகிறது. எந்த தகவலையும் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. இப்படம் பெண்ணை பற்றிய தகவலை சொல்கிறது. நாட்டின் கண்கள், தெய்வம் என பெண்களை வர்ணிக்கும் சமுதாயம்தான் அவர்களை போகப்பொருளாகவும், காம பார்வையுடனும் பார்க்கிறது. இருவேறு தகவல்களை இணைத்து இந்த ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. தேஜா, டிம்பிள் ரோஸ், ரிஷி, மயில்சாமி நடிக்கின்றனர். சுஜித் தென்றல் இசை. ஜிது ஜோசப் தயாரிப்பு. இதன் ஆடியோ வெளியிடப்பட்டது.