மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 1080 பணியிடங் களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாக பயிற்சியாளர்: மைனிங்- 319, எலக்ட்ரிக்கல்-159, மெக்கானிக் கல்-145, சிவில்-50, இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்- 9, கெமிக்கல்/மினரல் - 20, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் -7. தகுதி: மேற்குறிப்பிட்டபணிக ளுக்கு குறைந்த பட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் தொடர்புடைய பாடப் பிரிவில் பிஇ அல்லது பிடெக் அல்லது பிஎஸ்சி இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி. வயது: 31.3.2011ன்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப் படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர். விண்ணப்ப கட்டணம்: ரூ.500ஐ Coal India Limited என்ற பெயருக்கு கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப்பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கூடுதல் விவரங்களுக்கு www.coalindia.in இணையதளத்தை பார்க்கவும். பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: Chief Manager (Personnel Recrîitment), Coal India Limited, 10 NS Road, Post Bag No.43, GPO, Kolkata 700001. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 4. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி தேதி: ஜூன் 13.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook