Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
25
Mar
பாகிஸ்தான் புதிய கேப்டனை தேர்வு செய்வது கடினம்: மிஸ்பா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper



பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா- உல்- ஹக், ஒரு நாள் போட்டிகளில் இருந்து, ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய ஒரு நாள் அணி கேப்ட னை தேர்வு செய்வது கடினம் என மிஸ்பா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது: எனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது. இதில், எனது இன்னிங்ஸை விளையாடியுள்ளேன். தற் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்வதில், இளம் வீரர்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம் ஒரு நாள் அணி கேப்டனை தேர்வு செய்வது, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு சவாலான காரியம். கேப்டன் பதவிக்கு தகுதியான நபர்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது.

எங்களின் அடிப்படை கட்டமைப்பில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையை மற்ற அணிகளுடன் ஒப்பிட கூடாது. பெரும்பாலான போட்டிகளில் நான் விரைவாக ஆட்டமிழந்து விட்டால், 50 ஓவர்கள் தாக்குபிடித்து ஆடுவது சிரமம். அது போன்ற சமயங்களில் நிறைய சவாலான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

எங்களிடம் அனுபவமற்ற பேட்டிங் வரிசையே உள்ளது. ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்து விட்டால், ஒரு பந்து க்கு ஒரு ரன் என்ற வீதத்தில் கூட ரன் சேர்த்து விடலாம். அனுபவமில்லாத பேட்டிங் வரிசை கொண்ட அணி யால், பெரிய இன்னிங்ஸில் எப்படி ஆட வேண்டும் என்பது தெரியவில்லை. இதுதான் பாகிஸ்தானின் பிரச்னை மற்றும் மாற்றப்பட வேண்டிய விஷயம். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் கொள்கைப் படி, செலக்ஷன் கமிட்டியிடமே முழுமையான மற்றும் இறுதி அதிகாரம் உள்ளது. கேப்டனால் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement