2 பேர் மீது ஆசிட் வீச்சு பெண்ணிடம் விசாரணை
தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சொர்ணா (42), கட்டிட தொழிலாளி. இவரது தங்கை கணவர் லட்சுமண அய்யா, ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர். இவரும் கட்டிட தொழிலாளி. அடிக்கடி சொர்ணா வீட்டிற்கு வந்து அங்கு தங்குவது வழக்கம். நேற்றிரவு 10 மணி அளவில் சொர்ணாவுக்கும்- லட்சுமண அய்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சொர்ணா வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து லட்சுமணன் மீது வீசினார். அலறிக் கொண்டு வெளியில் ஓடி வந்தார். ஆத்திரம் தீராமல் பின் தொடர்ந்து வந்த சொர்ணா மீதியிருந்த ஆசிட்டையும் வீசிய போது அவ்வழியாக சென்ற வினோத்குமார் என்பவரின் மீது பட்டது. காயமடைந்த 2 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிந்து சொர்ணாவிடம் விசாரிக்கின்றனர்.