லண்டன்: இங்கிலாந்தில் நீதிமன்றப் பணிகளின்போது, வழக்கு விசாரணையை கவனிக்காமல் அரசு வழங்கிய கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படங்களை 4 நீதிபதிகள் பாத்து ரசித்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவர்களது குற்றம் நிரூபணமானது. இதைத் தொடர்ந்து, 3 நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மற்றொருவர் ராஜினாமா செய்துவிட்டார்.இங்கிலாந்தில் அரசு மற்றும் நீதிமன்ற பணிகளின்போது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாலியல் தொடர்பான காட்சிகளை அரசு வழங்கிய சாதனம் மூலம் பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.ஸ்விம்கியாட் நகர மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுல்ஸ், குடியேற்ற நீதிபதி வாரன் கிரான்ட், துணை மாவட்ட நீதிபதியும் பதிவாளருமான பீட்டர் புல்லக் மற்றும் பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ஆகிய 4 பேரும் தங்களது நீதிமன்ற பணிகளின்போது அரசு வழங்கிய கம்ப்யூட்டர் மூலம் இத்தகைய காட்சிகளை பார்த்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்கள்மீது ஒழங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொண்டது. இவ்விசாரணையின்போது அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானது. அவர்களுக்கு அரசு வழங்கிய கம்ப்யூட்டரில் உடலுறவு காட்சிகள் பதிவாகி இருந்தது.இத்தகைய மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவர்களை நீதிபதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே டிமோதி பவுல்ஸ், வாரன் கிரான்ட் மற்றும் பீட்டர் புல்லக் ஆகிய 3 பேரையும் பணிநீக்கம் செயயப்படுகின்றனர் என்று ஒழங்கு நடவடிக்கை குழு நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையின்போதே மற்றொரு நீதிமன்ற பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.