Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
18
Mar
அரசு விளம்பரங்களில் நடிக்க ஹீரோக்கள் மறுப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோலிவுட், மல்லுவுட் நடிகர்கள் அரசு விளம்பரங்களில் அவ்வப்போது நடிக்கின்றனர். கேரளாவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் திரைப்பட விநியோகம், ஆடியோ, வீடியோ காப்பி ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் உரிமை போன்றவற்றுக்கு 5 சதவீதம் வாட் வரி விதித்து அறிவித்தது. ஏற்கனவே 14 சதவீதம் வாட் வரி இருக்கிறது. இதையடுத்து வாட் வரி 19 சதவீதமாக விதித்து இருப்பதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள அரசு விளம்பரங்களில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், திலீப், ரீமா கல்லிங்கல் போன்ற நடிகைகள் அவ்வப்போது நடித்து வருகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்ட 5 சதவீதம் கூடுதல் வாட்  வரிக்கு நட்சத்திரங்கள் மற்றும் கேளர திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கேரள அரசு விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுக்க உள்ளதாக கேரள படவுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விரைவில் திரையுலகினர் கூடி ஆலோசித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement