கமல்-மணிரத்னம் மீண்டும் மோதல்
கமல் நடித்துள்ள ‘உத்தம வில்லன்' ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.இதற்கிடையில் மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓ காதல் கண்மணி‘ படப்பிடிப்பும் முடிந்து திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இப்படமும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கமல், மணிரத்னம் படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆவது ஏற்கனவே நடந்திருக்கிறது. மணிரத்னம் இயக்கிய தளபதி, கமல் நடித்த குணா படம் கடந்த 1991ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் திரைக்கு வந்தது. அதேபோல் விஸ்வரூபம் படம் தமிழ்நாட்டில் ரிலீஸுக்கு பிறகு வெளிமாநிலங்களில் 2013ம் ஆண்டு பிப்ரவரி 1ம்தேதி வெளியானது. அதேநாளில் மணிரத்னத்தின் ‘கடல்‘ படம் திரைக்கு வந்தது. 2 வருடத்துக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரேநாளில் கமல், மணிரத்னம் படம் திரைக்குவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.