விறுவிறுப்பாக நடந்து வரும் உலக கோப்பை தொடரின், காலிறுதி சுற்றில் நாளை இந்தியா- வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மெல்போர்னில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது. இந்தியா லீக் சுற்றில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக காலிறுதிக்குள் நுழைந்தது. தவான், கோஹ்லி, ரகானே, கேப்டன் டோனி நல்ல பார்மில் உள் ளனர். ஜிம்பாப்வேவுக்கு எதி ரான கடைசி லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா சதம் அடித்து அசத்தினார். ரோகித் சர்மாவின் பார்ம்மை ரன்னை அடிப்படையாக வைத்து கண க்கிட முடியாது என்பதால், அவர் எப்போது வேண்டுமானாலும் சிறப்பாக விளையாடலாம். ஒட்டு மொத்தத்தில் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் எந்த ஒரு சவாலையும் சமாளிக்கும் வகையில் மிக வலுவாக உள்ளது.
பந்து வீச்சில் ஷம்மி, மொகித் சர்மா, உமேஷ் யாதவ் அசத்தி வருகின்றனர். ஜிம்பாப்வேவுடனான போட்டியில் அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சில் தடுமாற்றத்தை காண முடிந்தது. இருவரும் 10 ஓவரில் 70 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்தனர். தவறு களை திருத்தி கொண்டு களம் காண வேண்டியது அவசியம். வங்கதேச அணியை பொறுத்த வரை முதல் முறையாக காலிறுதிக்குள் நுழைந்த உற்சாகத்தில் களமிறங்குகிறது. நல்ல பார்மில் உள்ள அந்தஅணியை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. துவக்க வீரர்கள் தமீம் இக்பால், இம்ரூல் கயஸ் சற்றே தடுமாறி வருகிறன்றனர். ஆனால் மிடில் ஆர் டரில் சவுமியா சர்க்கார், மகமதுல்லா சூப்பர் பார்மில் உள்ளனர்.
மகமதுல்லா தொடர்ச்சியாக இரண்டு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். முஷ்பிகூர் ரகீம், ஆல் ரவுண்டர்கள் ஷாகிப் அல் ஹசன், சபீர் ரகுமான் இருப்பதும் பலம். காயத்தால் நியூசிலாந்துடன் விளையாடாத கேப்டன் மோர்டசா அணிக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. பந்து வீச்சில் தைஜுல் இஸ்லாம், தஷ்கின் அகமது, ரூபைல் ஹொசைன் இருப்பதும் பலம். உலக கோப்பையில் இரு அணிகளும் இரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.