பழவேற்காட்டில் ரூ. 5.50 கோடியில் மீன் இறக்குமதி தளம்
பொன்னேரி: பழவேற்காட்டில் ரூ. 5.50 கோடியில் மீன் இறக்குமதி தளம், மீன் அங்காடி கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை பொன்னேரி எம்எல்ஏ பொன்ராஜா ஆய்வு செய்தார்.பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள மீன்வளப் பல்கலைகழகத்தின் தொழில் நுட்ப நிலைய ஆய்வு கூடத்தில் இறால் வளர்ப்பு, மீன் குஞ்சு வளர்த்தல் ஆகியவற்றை பொன்னேரி தொகுதி எம்எல்ஏ பொன்.ராஜா பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பழவேற்காட்டில் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் மீன் இறக்குமதி தளம், மீன் அங்காடி ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார். கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ராணிபுகழேந்தி, மீனவ கூட்டுறவு சங்க தலைவர் கஜேந்திரன், துணைத்தலைவர் தேசப்பன், கவுன்சிலர் மெரட்டூர் திருமுருகன், கூடுவாஞ்சேரி ஊராட்சி தலைவர் செந்தில்குமார், மீஞ்சூர் மாரி உள்பட பலர் உடனிருந்தனர்.