மலிவு விலை கடைகள் மூலம் ரூ. 21.73 கோடிக்கு காய்கறி விற்பனை
சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.யூ.சி.எஸ். மற்றும் அண்ணாநகரில் உள்ள சிந்தாமணி பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்று திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது, அங்குள்ள பொதுமக்களிடம் காய்கறிகளின் தரம் மற்றும் விலை குறித்து கேட்டறிந்தார்.அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் 58 பண்னை பசுமை நுகர்வோர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை மாநகரில் 42 கடைகளும், கோயம்புத்தூரில் 10 கடைகளும், மதுரையில் 4 கடைகளும், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலையில் தலா 1 கடைகளும் செயல்படுகின்றன. சென்னையில் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வேர் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 75,74,282 டன் காய்கறிகள் ரூ.21.73 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் கூட்டுறவு) அந்தோணிசாமி ஜான் பீட்டர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.