கஞ்சா பதுக்கல்: அதிமுக பிரமுகர் குடும்பத்துடன் கைது
லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி சிறுதையூர் பகுதியில் வசிப்பவர் சாகுல் அமீது (63). அதிமுக பிரமுகர். இவரது மனைவி சைனபா(52), மகன் மைதீன்பாஷா(42), மருமகள் பதர்னிஷா(40). இன்று காலை 10 பேர்கொண்ட தனிப்படை போலீசார் சிறுதையூர் சென்றனர். அங்கு சாகுல் அமீது வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டில், 108 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பறிமுதல் செய்த போலீசார், சாகுல் அமீது, சைனபா, மைதீன்பாஷா, பதர்னிஷா ஆகியோரை கைது செய்து லால்குடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.