நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பிறகு மும்பையில் குடியேறிய பிரபு தேவா, இந்தி படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது சென்னை, பெங்களூருக்கு வந்து நெருங்கிய நண்பர்களை சந்திப்பதும், அவர்களுக்கு பார்ட்டி தந்து கலந்துரையாடிவிட்டு செல்வதுமாக உள்ளார். சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்க தனது நெருக்கமான இயக்குனர்கள், நடிகர்களை அழைத்திருந்தார். நடிகைகளில் கன்னட ஹீரோயின் தேஜஸ்வனிக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு விடுத்தார். அவர் பார்ட்டியில் கலந்துகொண்டார். அவரை சக விருந்தினர்களுக்கு பிரபு தேவா அறிமுகம் செய்து வைத்தார்.
இது குறித்து தேஜஸ்வனி கூறும்போது, ‘நீண்ட நாட்களாகவே பிரபு தேவாவை எனக்கு நன்றாக தெரியும். அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது என்னை அழைத்தார். நானும் அப்போது சென்னையில்தான் இருந்தேன். நெருங்கிய நண்பர்களுக்கு அவர் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். என்னை அதில் பங்கேற்க கேட்டார்' என்றார்.‘இந்தியில் அவர் இயக்கும் படத்தில் நடிக்கிறீர்களா?‘ என்று தேஜஸ்வனியிடம் கேட்டபோது,‘எங்கள் உறவு எதையும் எதிர்பார்த்து ஏற்பட்டது கிடையாது. நாங்கள் இருவரும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பழகும் மிக நெருக்கமானவர்கள்' என்றார்.தேஜஸ்வனியின் இந்த பதில், இருவருக்கு இடையே நட்பை தாண்டிய உறவு இருப்பதற்கு அறிகுறி என மீடியாவினர் கருதுகின்றனர். சீக்கிரமே இவர்களின் காதல் விவகாரம் வெளிவரும் என சினிமா வட்டாரத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது.