ராஸ் தொண்டு நிறுவனத்தில் உலக மகளிர் தினவிழா
திருத்தணி: ராஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா திருத்தணியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கட்ரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்மிளா அனைவரையும் வரவேற்றார். இணை செயலாளர் மம்தா, திருத்தணி ஆர்டிஓ சேதுமாதவன், தாசில்தார் கணேசன், நகர் மன்ற தலைவர் சவுந்திரராசன், ஒன்றிய குழுதலைவர் இ.என். கண்டிகை ரவி, நகராட்சி ஆணையர் மல்லிகா ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரமணா, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ராஸ் தொண்டு நிறுவன பொது செயலாளர் டாக்டர் முனிரத்தினம் நன்றி கூறினார்.