கொல்கத்தா: பாலியல் பலாத்கார வழக்கை உடனடியாக பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.மேற்குவங்க மாநிலம், பிதான் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷில்பா(28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். கடந்த 9ம் தேதி நண்பர் ஒருவர், என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்ற போது, மேலும் 3 பேர் நண்பர் வீட்டில் இருந்தனர். அப்போது, அவர்கள் எனக்கு குளிர்பானம் கொடுத்தனர். அதை குடித்தவுடன் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன்பின் நண்பரும், அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும், என்னை ஆபாசமாக படம் பிடித்தனர். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், ஆபாச படங்களை நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறிருந்தார்.பலாத்கார புகாரை போலீசார் உடனடியாக வாங்க மறுத்ததாகவும், வழக்கு பதிவு செய்ய மறுத்ததாகவும் ஷில்பா குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஷில்பா கொடுத்த புகார் குறித்து ஒரு வாரம் கழித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஷில்பாவின் குற்றச்சாட்டுகளை போலீசார் மறுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’ஷில்பா மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார். சமீபத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். எனினும் ஷில்பா குறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.