கொலை மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிக்கு வலை
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரத்தை சேர்ந்தவர் ஞானமுத்து(62). இவர், சினிமா வினியோகஸ்தராக உள்ளார். இவர் தனது நிலத்தை விற்க முடிவு செய்தார். அதே ஊரை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட பாஜ துணைத்தலைவர் செல்வராஜ், ராமச்சந்திரன், சுந்தர்ராஜ் ஆகிய மூன்று பேர் ஞானமுத்துவிடம், அந்த நிலத்தை விற்க கூடாது என்று கொலை மிரட்டல் விடுத் துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் பாஜ நிர்வாகி உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.