அதிமுக பிரமுகர் கொலை: 3 பேர் சரண்
தாம்பரம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா (57). அதிமுக கிளை செயலாளரான இவர் வட்டித் தொழிலும் செய்து வந்தார். கடந்த 10ம் தேதி இவரை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் வசிக்கும் தெருக்களில் புகுந்து வீடுகளை சூறையாடி பொருட்களை அடித்து நொறுக்கினர். காமராஜர் சிலை உடைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவியதால் சிலர் வீடுகளை காலி செய்து சென்றனர்.இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ராபின், அருள்ராஜ், பெரியசாமி ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் இன்று காலை சரணடைந்தனர்.