11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதில் கால்இறுதிக்கு போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மற்றும் தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. மெல்போர்னில் வரும் 19ம் தேதி நடக்கும் 2வது கால் இறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதேபோல் அடிலெய்டில், வரும் 20ல் நடக்கும் 3வது காலிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
இந்த இருபோட்டியிலும் வெல்லும் அணிகள் அரையிறுதியில் வரும் 26ம் தேதி மோதும்.வங்கதேசத்தை இந்தியாவும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை பாகிஸ்தானும் வெல்லும் பட்சத்தில் பரமஎதிரிகளான இரு அணிகளும் அரைஇறுதியில் மோதும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றிருந்தது. மீண்டும் இரு அணிகளும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டதால் அந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. கடந்த உலக கோப்பையில் மெகாலியில் நடந்த அரைஇறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு நுழைந்தது குறிப்பிடத்தக்கது.