Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
16
Mar
இன்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் செரீனா, பெடரர் முன்னேற்றம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இன்டியன்வெல்ஸ்: இன்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இன்டியன்வெல்ஸ் என்ற இடத்தில் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த மூன்றாம் சுற்றுப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கசகஸ்தான் வீராங்கனை தியாசை எதிர் கொண்டார். இந்தப்போட்டியில் செரீனாவின் சர்வீஸ்கள் சிறப்பாக அமைந்திருந்தன. மேலும், அவரது பேஸ்லைன் ஷாட்களும் துல்லியமாக அமையவே, ஆட்டம் முழுவதும் தியாஸ் திணறினார். முதல் செட்டில் 2 கேம்களை மட்டுமே வென்ற தியாஸ், இரண்டாவது செட்டில் ஒரு கேமைக் கூட வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-0 என நேர் செட்களில் தியாஸை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு மூன்றாம் சுற்றுப்போட்டியில் 7ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா, பிரிட்டனின் ஹீதர் வாட்சனை எதிர்கொண்டார். இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீதர் வாட்சன், 6-4, 6-4 என நேர் செட்களில் அக்னீஸ்கா ராட்வான்ஸ்காவை வென்றார். வாட்சன் (22). முதல் முறையாக அக்னீஸ்காவை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகளுடன் இதுவரை 12 முறை மோதியுள்ள வாட்சன், முதல் முறையாக உலக தர வரிசையில் 8ம் இடம் வகிக்கும் வீராங்கனையை வென்றுள்ளார்.

மற்றொரு மூன்றாம் சுற்றுப்போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லானா குஸ்னட்சோவாவை எதிர் கொண்டார். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் சம பலத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. அதில் செட்டை ஸ்டீபன்ஸ் வென்றார். ஆனால், இரண்டாவது செட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குஸ்னட்சோவா, ஸ்டீபன்ஸின் சர்வீஸ்களை 2 முறை முறியடித்தார். இதன் மூலம் அந்த செட் குஸ்னட்சோவா வசமானது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் குஸ்னட்சோவா, தூண்டப்படாத தவறுகளைச் செய்தார். இதன் மூலம் அவரது சர்வீஸ் ஒரு முறை முறியடிக்கப்பட்டது. செட்டையும் இழக்க நேர்ந்தது. இந்த ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ் 7-6 (7-4), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 2ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6-4, 6-2 என நேர் செட்களில் அர்ஜென்டினாவின் ஸ்வாடர்ஸ்மேனை வென்று மூன்றாம் சுற்றில் நுழைந்தார். மற்றொரு இரண்டாம் சுற்றுப்போட்டியில் அமெரிக்காவின் ஜான்சன், குரேஷியாவின் இவா கார்லோவிக்குடன் மோதினார். இந்தப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஜான்சன் 6-3, 7-6 (7-5) என்ற செட்களில் கார்லோவிக் கை போராடி வென்றார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement