உத்திரமேரூரில் மண்டல சந்திப்பு மாநாடு
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல தலைவர் லயன் எஸ்.கமல்கிஷோர் துணைவியார் லயன் கே.ரேணுகா மண்டல சந்திப்பு மாநாடு நடத்தினார். மாவட்ட ஆளுநர் லயன் சாயர் அரவிந்தகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். செயலாண்மை குழு தலைவர் ஆர்.மகாவீர்சந்த் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் தனபாலன், தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் விமலா அண்ணாதுரை சிறப்புரையாற்றினர். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் எம்.எஸ்.முருகப்பா, எஸ்.மகேஷ், மாவட்ட முதல் துணை ஆளுநர் கே.பி.குமணன், மாவட்ட 2ம் துணை ஆளுநர் டி.எஸ்.உதயசங்கர், டாக்டர் ஜி.நரசிம்மன், வட்டார தலைவர் ஏ.விஜயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். துப்புரவு தொழிலாளர்கள் 20 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. உத்திரமேரூர் சோழா அரிமா சங்க தலைவர் சங்கரன், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாண்மை குழு செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.