ஆவடி: ஆவடி நகர புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளர் த.ரங்கன் தலைமை தாங்கினார். பட்டாபிராம் நகர தலைவர் பிரேம் வரவேற்றார். மாநில துணைப் பொதுச்செயலாளர் முல்லை பலராமன், மாநில செயலாளர் தளபதி செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். டாக்டர் அம்பேத்கர், பூவை.மூர்த்தியார், பூவை.ஜெகன்மூர்த்தியார் ஆகியோரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, ஆவடி நகராட்சி வளாகத்தில் அம்பேத்கர், காமராஜர் சிலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, ஆவடியில் உள்ள 48 வார்டுகளிலும் கல்வெட்டு அமைத்து கொடியேற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட நிர்வாகிகள் குமார், தங்கசாமி, மாரி, புரட்சி சீனு, நகர நிர்வாகிகள் பிரபு, குமணன், கோபி, அருள், பாண்டியன், முல்லை ராஜசேகர், சின்னா, தீனா, பிரேம்ஜி, ராஜன், முல்லை மணிமாறன், தமிழ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.