ஹீரோவால் முடியும்போது எங்களால் முடியாதா? திரிஷா கோபம்
திருமணம் செய்துகொண்டு ஹீரோக்கள் நடிக்கும்போது, ஹீரோயினால் நடிக்க முடியாதா என கோபம் அடைந்தார் திரிஷா.சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி அறிவிக்காத நிலையில் அவர் அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார். ‘திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என அவரிடம் கேட்டபோது கோபப்பட்டார்.
அவர் கூறியது: ஹீரோவிடம் போய் இந்த கேள்வியை கேட்பீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு கிடையாது. திருமணத்துக்கு பிறகு ஹீரோக்கள் நடிக்கலாம் என்கிறபோது நடிகைகளால் ஏன் முடியாது? உடல் அளவில்தான் ஆணும் பெண்ணும் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். மற்ற வித்தியாசம் எதுவும் இல்லை. எனது நிச்சயதாயதார்த்தத்துக்கு பிறகு 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். திறமை இருப்பதால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். இதில் திருமணம் எங்கிருந்து குறுக்கே வருகிறதோ?இவ்வாறு திரிஷா கோபத்துடன் கூறினார்.