ஜூனியர் என்டிஆர் படத்துக்கு பைனான்ஸ் பிரச்னை
முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட் கைவசம் இருந்தால் போதும் கையில் ஒரு பைசா இல்லாவிட்டாலும் படத்தை தயாரிக்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இப்படித்தான் ஹீரோ ஜூனியர் என்டி ஆருடன் படத்தை ஆரம்பித்தது டோலிவுட் நிறுவனம் ஒன்று. உடனே பெரிய நிறுவனம் ஒன்றும் தயாரிப்பில் கைகோர்த்தது. இதற்கிடையில் நாக சைதன்யா நடிக்கும் படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்க தொடங்கியது. என்டிஆர் படத்துக்காக கைகோர்த்த பெரிய நிறுவனம் திடீரென வெளியேற பைனான்ஸ் பிரச்னையில் படம் சிக்கிக்கொண்டது. தற்போதைக்கு நாக சைதன்யா படம் முடிந்தபிறகுதான் என்டிஆர் படத்தை தொடர முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதுவரை ஸ்டார் நடிகர் காத்திருக்க வேண்டியதுதான் என்கிறது டோலிவுட் வட்டாரம்.