ஹோபர்ட்: ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு லீக் போட்டி ஹோபர்ட் நகரில் இன்று நடந்து வருகிறது. ஹோபர்ட் நகரில் இன்று மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் விரைவாக ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, டாஸ் வென்ற மைக்கேல் கிளார்க் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளை பெற்று, இலங்கையுடன் சமமாக இருக்கும். ஆனால், இலங்கை அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டு நாக் அவுட் சுற்றுகளில் பலவீனமான அணியை எதிர் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
இதனால், ஆஸ்திரேலியா அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக இந்தப்போட்டியில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு பவுலி ங்கை தேர்வு செய்தார் கிளார்க். ஸ்காட்லாந்து துவக்க பேட்ஸ்மேன் கோயிட்சர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்டார்க் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்காட்லாந்து அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. மெக்லாய்டு 17 ரன்னுடனும், மசான் 12 ரன்னு டனும் பேட்டிங் செய்தனர்.