Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
14
Mar
வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

உலக கோப்பை தொடரில் நாளை நடக்கும் 41வது லீக் போட்டியில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ்-யுஏஇ அணிகள் மோதுகின்றன. நேப்பியரில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் காலிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், மிக அதிக ரன் ரேட்டுடன் யுஏஇ அணியை வீழ்த்த வேண்டும். அதே சமயம் அயர்லாந்து-பாகிஸ்தான் போட்டியின் முடிவை பொறுத்தே வெஸ்ட் இண்டீசின் காலிறுதி வாய்ப்பு அமையும். யுஏஇ கத்துக்குட்டி என்பதால், வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முயலும். ஜிம்பாப்வேவுடன் ருத்ர தாண்டவம் ஆடிய கெயில், சாமுவேல்ஸ் அதன் பின் சோபிக்கவில்லை. ஸ்மித் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். மிடில் ஆர்டரில் ராம்தின், சிம்மன்ஸ், கார்ட்டர் கை கொடுக்கலாம். இறுதி ஓவர்களில் சம்மி, ரஸ்ஸல் அதிரடி காட்டலாம்.

பந்து வீச்சாளரான கேப் டன் ஹோல்டர் பேட்டிங்கிலும் அசத்துவது பலம். இந்தியாவுடனான கடைசி போட்டியில், ஹோல்டர் மட்டுமே தனி ஆளாக போராடி அரை சதம் அடித்தார். பந்து வீச்சில் டெய்லர், ரஸ்ஸல், சம்மி அசத்த காத்திருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் இடம் பெறலாம்.  யுஏஇ விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறி விட்டது. பேட்டிங்கில் சைமன் அன்வர் அசத்தி வருவது மட்டுமே யுஏஇ அணிக்கு ஆறுதல். இவருடன் ஸ்வப்னில் பாட்டில், குர்ரம் கான் கை கோர்த்து விளையாடலாம். அதிரடியான வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டரை சமாளிக்க, யுஏஇ பவுலர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டியது அவசியம். காலிறுதிக்கு முன்னேற வெஸ்ட் இண்டீசும், ஆறுதல் வெற்றி பெற யுஏஇ அணியும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement