Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
14
Mar
மதுபாட்டிலுடன் எஸ்ஐ ஜாலிவாட்ஸ் அப் படத்தால் பரபரப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

விழுப்புரம்: மதுபாட்டிலுடன் சிறப்பு எஸ்ஐ இருப்பது போன்ற படங்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகி, விழுப்புரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தின் உள்ளே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அங்கு பணியில் இருந்த நகர காவல் நிலைய சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் அசோக்ராஜன் தனது மேஜையில் மது பாட்டில்கள், சோடா மற்றும் சைடிஸ், ஹான்ஸ் ஆகியவற்றுடன்   போதையில் தலை தொங்கியபடி இருப்பது போன்ற படங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்களில் வெளியானது. இது விழுப்புரம் எஸ்பியின் வாட்ஸ்அப்பிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பார்த்து எஸ்பிஅதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement