அனந்தேரி அரசு பள்ளியில் முப்பெரும் விழா
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அனந்தேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 52வது ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா, விளையாட்டு மற்றும் அறிவியல் கண்காட்சி விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை ஷீபா தலைமை வகித்தார். ஆசிரியைகள் செல்வலதா, இளவரசி, ஸ்ரீதேவி, பகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சீனவாசன் வரவேற்றார். மாணவர்களுக்கு நாட்டியம், நடனம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற 80 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், பேனா, பென்சில் ஆகியவற்றை ஊராட்சி மன்ற தலைவர் ரவிகுமார் வழங்கினார்.