ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
திருவள்ளூர்: திருப்பாச்சூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், இசிஇ மற்றும் இஇஇ துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் கே.சி.வாசுதேவன் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சசிகுமார் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் சங்கர் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக சென்னை ‘கியூ வே டெக்னாலஜிஸ்‘ நிறுவன இயக்குனர் டென்வீர் வில்லியம், இரு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 152 தொழில்நுட்ப கருத்துக்கள் வரப்பெற்றது. இதில், 61 தொழில்நுட்ப கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் கே.சி.வாசுதேவன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கருத்தரங்கு குறித்து பேராசிரியர் ஜெ.வெங்கடேஷ் விளக்கினார்.தொடர்ந்து கருத்தரங்கு குறுந்தகடு வெளியிடப்பட்டது. துறைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.