உத்திரமேரூரில் வருவாய் திட்ட முகாம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பென்னலூர் கிராமத்தில் மக்களை தேடி வருவாய் திட்ட முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டாட்சியர் பேபி இந்திரா முன்னிலை வகித்தார். துணை தலைவர் வசந்தா வரவேற்றார்.முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றம், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 32 மனுக்கள் பெறப்பட்டன. அவைகளில் 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 9 மனுக்கள் நிலுவையில் உள்ளன.பூந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன், ஊராட்சி செயலர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஏஓ ரஜினிபாஸ்கர் நன்றி கூறினார்.