உலக கோப்பை தொடரில் நாளை நடக்கும் லீக் போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. ஹோபர்ட்டில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது. ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத் தில் உள்ளது. இந்த போட்டி யில் வென்று இரண்டாம் இடத்துக்கு முன்னேற முயற்சிக்கும். பேட்டிங்கில் வார்னர், பின்ச், சுமித், கேப்டன் கிளார்க், பிராட் ஹேடின் அசத்தி வருகின்றனர். மேக்ஸ்வெல்லின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணிகள் திணறி வருகின்றன. பார்ம் இல்லாததால் நீக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வாட்சன் கடைசி யாக இலங்கையுடன் நடந்த போட்டியில் சிறப்பாக ஆடி னார்.
பந்து வீச்சில் ஜான்சன், ஸ்டார்க் அசத்தி வருகின்றனர். கடைசியாக அணியில் சேர்க்கப்பட்ட ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் தனது இடத்தை உறுதி செய்யும் வகையில், இலங்கையுடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேக்ஸ்வெல், தோஹர்டி சுழல் கூட்டணியும் அசத்த காத்திருக்கிறது. விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து ஸ்காட்லாந்து பரிதாபமாக உள்ளது. பேட்டிங்கில் கைலே கோட்சர், மாட் மசான், கேப்டன் மொமன்சன் ஆகியோரையே ஸ்காட் லாந்து அதிகம் சார்ந்துள்ளது. பவுலிங்கில் பெரிங்டன், டேவி, டெய்லர் அசத்தலாம். மிகவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை, கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து வீரர்களால் சமாளிப்பது கடினமே.